“ போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து கஞ்சி வழங்கிய பெண்கள் மூவர் கொடூரமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு நிகரான சம்பவமே இதுவாகும். எனவே, இப்படியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விஜித ஹேரத் எம்.பி, நினைவேந்தல் உரிமை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். அது பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ எமது நாட்டில் சிவில் யுத்தங்களின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு அவர்களின் உறவுகளுக்கு உரிமை உள்ளது. ஆனால் திருகோணமலை, சம்பூரில் நடைபெற்ற சம்பவம் கவலையளிக்கின்றது.
தமது உறவுகளை நினைவுகூர்ந்து கஞ்சி கோப்பையொன்றை வழங்கியதற்காக ரணில் விக்கிரமசிங்க அரசு, பொலிஸாரை ஏவிவிட்டு அப்பாவி பெண்கள் மூவரை தரையில் இழுத்துச்சென்று கைது செய்துள்ளது.
இஸ்ரேலில், பாலஸ்தீனத்தில் இடம்பெறும் மிலேச்சத்தமான சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறுமானால் அவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
நினைவேந்தல் உரிமை உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு உ ள்ளது. இது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே, தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தி, இலங்கையர்கள் மிலேச்சத்தனமானவர்கள் என காண்பிக்க வேண்டாம்.” – என்றார்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!