ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஜனாதிபதி தேர்தலுக்காக மேற்படி தொகை ஒதுக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பான செலவு மதீப்பீட்டு அறிக்கை திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
” வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் மதிப்பீட்டு அறிக்கைகளை திறைசேரி கோரும். அந்தவகையில் ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சிசபைத் தேர்தல்களுக்கான செலவு மதிப்பீட்டு அறிக்கைகளை அனுப்பி வைத்துள்ளோம்.” – எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி தேர்தல்களை நடத்த தலா 10 பில்லியன் ரூபாபடி (40 பில்லியன்) தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசமைப்பின் பிரகாரம் 2024 ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். நவம்பர் மாதம் முதலாம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவர் பதவியேற்றிருக்க வேண்டும்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!